என் மலர்

  செய்திகள்

  திருவனந்தபுரம்: பிளஸ்-2 மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
  X

  திருவனந்தபுரம்: பிளஸ்-2 மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவனந்தபுரம் அருகே திருமண ஆசைகாட்டி பிளஸ்-2 மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  திருவனந்தபுரம்:

  திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு ஆயிரம் தெங்கு பகுதியை சேர்ந்தவர் சுஜித் (வயது 22). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்லும் போது சுஜித் அவரை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். நாளடைவில் சுஜித்தின் பேச்சில் மயங்கி அந்த மாணவியும் அவரை காதலிக்க தொடங்கினார்.

  இதனால் அந்த மாணவி பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் சுஜித்துடன் ஊர் சுற்ற தொடங்கினார். இந்த தகவல் அவரது பெற்றோருக்கு கிடைத்ததும் அவர்கள் மகளை கண்டித்தனர். ஆனாலும் காதலர்கள் ரகசியமாக சந்தித்து பழகி வந்தனர்.

  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி போத்தன்கோடு போலீசில் புகார் செய்தனர். தங்கள் புகாரில் சுஜித் பற்றியும் கூறியிருந்தனர்.

  இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். அந்த மாணவியின் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் துப்புதுலக்கிய போது எர்ணாகுளம் பகுதியில் அவர் இருப்பது தெரியவந்தது.

  இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி ஒரு வீட்டில் இருந்த அந்த மாணவியையும் அவரது காதலன் சுஜித்தையும் மீட்டனர். அவர்களை போத்தன்கோடு போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.

  அப்போது அந்த மாணவியை சுஜித் திருமண ஆசை காட்டி கற்பழித்தது தெரியவந்தது. அந்த மாணவியை திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர் போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அங்கு லாட்ஜில் அறை எடுத்து சுஜித் உல்லாசமாக இருந்துள்ளார்.

  இதை தொடர்ந்து வாலிபர் சுஜித்தை போலீசார் கைது செய்தனர். அந்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  Next Story
  ×