என் மலர்

  செய்திகள்

  விபசார விடுதியில் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை- பணம் மாற்ற முடியாததால் இளம்பெண் தப்பினாள்
  X

  விபசார விடுதியில் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை- பணம் மாற்ற முடியாததால் இளம்பெண் தப்பினாள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியானாவில் விபசார விடுதியில் ரூ.20 லட்சத்துக்கு விற்கப்பட்ட இளம்பெண் பண பரிமாற்ற பிரச்சினையால் தப்பினாள்.
  ஆல்வார்:

  அரியானா மாநிலம் சாவாய் மதோபூர் மாவட்டத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக 21 வயது இளம் பெண் தனது சகோதரர் மற்றும் மைத்துனருடன் வந்து இருந்தார். அப்போது சகோதரரும், மைத்துனரும் சேர்ந்து ஒரு தரகர் மூலம் இளம் பெண்ணை விபசார விடுதிக்கு விற்பனை செய்தனர்.

  இதற்காக ரூ.20 லட்சம் விலை பேசி உள்ளூர் பஸ் நிலையத்துக்கு இளம் பெண்ணை கூட்டிச் செல்ல அழைத்து வந்தனர். இளம் பெண்ணை விலைக்கு வாங்கிய தரகர் பஸ் நிலையம் வந்து ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

  ரூ.20 லட்சம் பணத்தை புதிய நோட்டுகளாக தர வேண்டும் என்று கேட்டதால் தரகரால் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆல்வார் பஸ் நிலையத்தில் வைத்து தரகருக்கும் இளம் பெண்ணின் சகோதரர், மைத்துனருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருவருக் கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர்.

  உடனே இளம்பெண் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி கூறி போலீசாரின் உதவியை நாடினார்.

  அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்து வந்து விசாரித்தனர். இளம் பெண்ணிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.

  அப்போது இளம் பெண்ணின் குடும்பத்தினர் விபசார தொழிலில் ஈடுபடுவோர் என தெரிய வந்தது. அவரது தந்தையும், சகோதரரும் விபசார புரோக்கர்களாக பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்தனர். 6 மாதத்துக்கு முன்புதான் மைத்துனரும் வந்து அவர்களுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

  அவர் தான் இளம் பெண்ணை ரூ.20 லட்சத்துக்கு ஒரு தரகரிடம் விற்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். தந்தையும் அதற்கு சம்மதித்து ரூ.20 லட்சத்துக்கு விற்றார். ஆனால் பணம் மாற்றும் பிரச்சினையால் இளம்பெண் விபசார விடுதியில் இருந்து தப்பினாள்.

  இதற்கிடையே இளம் பெண்ணை பெற்றோர் தவறான வழியில் நடத்தியதால் அவர்களுடன் செல்ல விரும்பவில்லை என்று மறுத்துவிட்டாள். இதனால் அப்பெண் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

  தந்தை, சகோதரர், மைத்துனர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

  Next Story
  ×