என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மனைவி காங்கிரசில் இணைகிறார்
By
மாலை மலர்24 Nov 2016 8:35 AM GMT (Updated: 24 Nov 2016 8:53 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் நவ்ஜோத்சிங் சித்து மனைவி வருகிற 28-ந்தேதி காங்கிரசில் இணைகிறார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் தற்போது டெலிவிஷன் வர்ணனையாளராக இருக்கிறார்.
பா.ஜனதா முன்னாள் எம்.பி.யான சித்துவின் மனைவி நவ்ஜோத் கவூர். பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த கட்சியில் இருந்து விலகினார்.
இதேபோல சித்துவும், ஜூலை மாதம் டெல்லி மேல்-சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இருந்து விலகினார்.
சித்துவின் மனைவி கவூரும், அகாலிதளம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரகத்சிங்கும் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சமீபத்தில் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சித்து மனைவி கவூர், ஆவாஸ்-ஏ- பஞ்சாப் அமைப்பின் முக்கிய தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பர்கத்சிங் ஆகியோர் வருகிற 28-ந்தேதி காங்கிரசில் இணைகிறார்கள்.
இந்த தகவலை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர்சிங் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
சித்து மனைவி நவ்ஜோத் கவூரும், பரகத்சிங்கும் டெல்லியில் காங்கிரஸ் தலைவரை நேரில் சந்தித்து கட்சியில் இணையும் விருப்பத்தை தெரிவித்தனர். அவர்கள் இருவரும் வருகிற 28-ந்தேதி காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்கள். அவர்கள் கட்சியில் இணைவதை வரவேற்கிறேன்.
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. ஒரே சிந்தனை உள்ளவர்கள் காங்கிரசில் இணைவது கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல சித்துவும், காங்கிரசில் சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அவர் இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Next Story
×