search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசவேலைக்கு சதி: காஷ்மீருக்குள் புகுந்த 200 தீவிரவாதிகள்
    X

    நாசவேலைக்கு சதி: காஷ்மீருக்குள் புகுந்த 200 தீவிரவாதிகள்

    காஷ்மீரில் 200 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி மேல்-சபையில் காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து எம்.பிக் கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ் ராஜ் கங்கா ராம்அகிர் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார் அவர் கூறியதாவது:-

    காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக கடந்த செப்டம்பர் வரை 105 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர். தற்போது வந்துள்ள தகவலின்படி காஷ்மீரில் 200 தீவிரவாதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்கள்.

    தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிப்பதற்காக மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    காஷ்மீரில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஷ்மீருக்குள் ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் தீவிரவாதிகள் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டு உள்ளனர்.

    200 தீவிரவாதிகள் எங்கெங்கு ஊடுருவி இருக்கிறார்கள் என்று தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×