என் மலர்

  செய்திகள்

  500 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை வைத்திருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
  X

  500 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை வைத்திருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பிடம் இந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.500, ரூ.1000 என ஐந்தாயிரம் கோடி இருப்பதாகவும், செல்லாமல் போய் விட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்து கொண்டு என்ன செய்வது என்பது புரியாமல் உளவு அமைப்பு அதிகாரிகள் தவித்தபடி உள்ளனர் என தெரியவந்துள்ளது.
  புதுடெல்லி:

  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி மிகவும் துணிச்சலாக எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டு தெரிவித்துள்ளன.

  அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள், மோடியின் பொருளாதார சீர்திருத்த முயற்சியை புகழ்ந்து எழுதியுள்ளன.

  ஆனால் மோடியின் நடவடிக்கையை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் சில கட்சிகள் தவிப்பது போல பாகிஸ்தானிலும் தவிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பு கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

  அந்த உளவு அமைப்பிடம் இந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.500, ரூ.1000 என ஐந்தாயிரம் கோடிக்கு இருப்பதே அதிர்ச்சிக்கு காரணமாகும். செல்லாமல் போய் விட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்து கொண்டு என்ன செய்வது என்பது புரியாமல் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு அதிகாரிகள் தவித்தபடி உள்ளனர்.

  காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆயுதப் பயிற்சி பெற்று வரும் தீவிரவாதிகளுக்கும் தேவையான அளவுக்கு ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு இந்திய பணத்தை கொடுத்து வந்தது. தற்போது அது முடங்கி விட்டது.

  இதனால் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிதி நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்பது பற்றி ஐ.எஸ்.ஐ. பல கோணங்களில் ஆலோசித்து வருகிறது.

  இதற்கிடையே தற்போதைய காஷ்மீர் மாநில சூழ்நிலையை பயன்படுத்தி அங்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா என்ற முயற்சியில் ஐ.எஸ்.ஐ. இறங்கி உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள வங்கிகளில் தமது ஆதரவாளர்கள் மூலம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி எடுத்துள்ளனர்.

  இது தவிர துபாய், நேபாளம், வங்க தேசம் மூலமாகவும் இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சிகளில் ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளது. இதை கண்டறிந்த இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது.

  இதையடுத்து பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுவதை தடுக்க என்ன செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
  Next Story
  ×