என் மலர்

  செய்திகள்

  அனாதை இல்லத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவர்
  X

  அனாதை இல்லத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அனாதை இல்லத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
  இந்தூர்:

  மத்தியப் பிரதேசம் மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் அனாதை இல்லத்தில் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

  அப்போது, அந்த காப்பகத்தில் இருந்த சிறுமிகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதிய சுக்லா என்ற பெண் அதிகாரி, அங்கிருந்த சிறுமிகளை தனியாக அழைத்துவந்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் விரிவாக விசாரணை நடத்தினார்.

  காப்பகத்தின் நிர்வாகியான அகர்வால்(72) என்பவர் தங்களை பலமுறை மிரட்டி கற்பழித்ததாகவும், இந்த கொடூரத்துக்கு அவரது மகள் உடந்தையாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகள் கண்ணீருடன் முறையிட்டனர்.

  இதையடுத்து, அகர்வாலின் மகள் ஷைலா(40) என்பவரை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரது தந்தை அகர்வாலும் விரைவில் கைதாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×