என் மலர்

    செய்திகள்

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்பது அம்பானி, அதானிக்கு முன்பே தெரியுமா?: பா.ஜ.க. எம்.எல்.ஏ. மறுப்பு
    X

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்பது அம்பானி, அதானிக்கு முன்பே தெரியுமா?: பா.ஜ.க. எம்.எல்.ஏ. மறுப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்பது தொழில் அதிபர்கள் அம்பானி, அதானிக்கு முன்பே தெரியும் என தான் கூறியதாக வெளியான செய்திக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்துள்ளார்.
    கோட்டா:

    பிரதமர் நரேந்திர மோடி 8-ந்தேதி இரவு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதற்கு மக்களிடையே ஒரு தரப்பினர் வரவேற்பும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மோடியின் இந்த அறிவிப்பு கருப்பு பணம் குவித்து வைத்துள்ள பா.ஜ.க. ஆதரவு தொழில் அதிபர்களுக்கு முன்பே தெரியும் என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதனை ஆமோதிப்பது போல பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் பேசிய வீடியோ ஆதாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் லாத்புரா தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பவானி சிங் ரஜாவத் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது வெளியாகி உள்ளது.

    அந்த வீடியோவில், “பணம் செல்லாது அறிவிப்பு தொழில் அதிபர்கள் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோருக்கு முன்பே தெரியும். அவர்கள் தங்கள் கருப்பு பணத்தை உடனே மாற்றி கொண்டார்கள். ரூ.2000 நோட்டு தரமாக இல்லை. குழந்தைகள் வைத்து விளையாடும் போலி ரூபாய் நோட்டுகள் போல இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மற்ற ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு இருக்க வேண்டும்” என்று பவானி சிங் ரஜாவத் பேசியது வெளியானது.

    ஆனால் இதனை அவர் மறுத்தார். இது குறித்து அவர் கூறுகையில், நான் பணம் செல்லாது அறிவிப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தது உண்மை தான். இந்த அறிவிப்பால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றேன். அதே சமயம் கருப்பு பணம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தேன். ஆனால் அந்த வீடியோவில் பேசியது போல் பேட்டி அளிக்கவில்லை. அது திரித்து செய்தி வெளியிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.

    எம்.எல்.ஏ. பவானி சிங் ரஜாவத் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த 2014-ம் ஆண்டு கோட்டா மாநகராட்சி தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என்று மக்களை அவர் மிரட்டியதாக புகார் எழுந்தது. ராஜஸ்தான் மாணவர் கொலையில் அங்கு தங்கி படிக்கும் பீகார் மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தொகுதியில் மக்களுக்கு தொல்லை கொடுத்த முதலைகளை சுட்டுக்கொன்றதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×