என் மலர்

  செய்திகள்

  பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டு மூலம் ரூ.2000 பெற்று கொள்ளலாம்
  X

  பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டு மூலம் ரூ.2000 பெற்று கொள்ளலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொதுத்துறை பெட்ரோல் பங்குகள் சிலவற்றில் டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு மூலம் 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் நிலவி வரும் சிக்கல்களை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகள் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

  குறிப்பிட்ட சில பொதுத் துறை பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு மூலம் 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துதாஸ் பெட்ரோலியம் உள்ளிட்டவற்றில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்களின் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

  இந்த வசதி இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் ஆனால் எப்பொழுது முடியும் என்று குறிப்பிடப்படவில்லை. பெட்ரோல் பங்குகளில் ஏற்கனவே பழைய ரூ.500 மற்றூம் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டு வருகின்றது.

  வங்கிகள் மற்றும் ஏடிஎம்-களில் நீண்ட வரிசையில் நின்று அவதிப்படுவதை குறைப்பதற்காக பெட்ரோல் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×