என் மலர்

  செய்திகள்

  ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுப்பு: கணவரை தரையில் இழுத்து சென்ற மனைவி
  X

  ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுப்பு: கணவரை தரையில் இழுத்து சென்ற மனைவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற ஊனமுற்றவருக்கு ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுத்ததால் அவரது மனைவி செய்து அறியாது கணவரை தரையில் இழுத்து சென்ற சம்பவம் காண்பவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
  ஐதராபாத்:

  ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற ஊனமுற்றவருக்கு ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுத்ததால் அவரது மனைவி செய்து அறியாது கணவரை தரையில் இழுத்து சென்ற சம்பவம் காண்பவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

  ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆனந்த்பூரில் உள்ள குண்டக்கல் அரசு மருத்துவமனைக்கு  பி. ஸ்ரீனிவாச்சாரி என்ற ஊனமுற்ற நோயாளி உடல்நலக்குறைவு காரணமாக அம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். உடன் அவரது மனைவி ஸ்ரீவாணி வந்திருந்தார். ஸ்ரீ வாணி கணவரை டாக்டரிடம் அழைத்து செல்ல அங்குள்ள ஊனமுற்றவருக்காக ஸ்ட்ரெச்சர் அல்லது வீல்சேர் கேட்டுள்ளார். அவர்களுக்கு வீல் சேர் வழங்க மருத்துவமனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஸ்ரீவாணி முதல் மாடியில் உள்ள மருத்துவரின் அறைக்கு  கணவரை தரையில் இழுத்து சென்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவருக்கு உதவி செய்தனர்.

  இது குறித்து மருத்துவமனை பொறுப்பாளர் மல்லிகார்ஜுன் ரெட்டி கூறுகையில்,

  'மருத்துவமனையில் 5 ஸ்ட்ரெச்சர்கள் உள்ளன. இவர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது, அனைத்தும் பயன்பாட்டில் இருந்தது அதனால் அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை '' என்றார்.

  சிறிது நேரம் காத்து இருக்கும் படி ஸ்ரீவாணியிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனை பொருட்படுத்தாமல் கணவரை ஸ்ரீவாணி  தரையில் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.
  Next Story
  ×