என் மலர்

  செய்திகள்

  பிரசவம் போன்று நீண்ட கால பலன் கொடுக்கும் தற்காலிக வலி: ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து நாயுடு பேச்சு
  X

  பிரசவம் போன்று நீண்ட கால பலன் கொடுக்கும் தற்காலிக வலி: ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து நாயுடு பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டில் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணியானது பிரசவம் போன்று நீண்ட காலத்திற்கு பலன் தரக்கூடிய தற்காலிக வலி என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசினார்.
  புதுடெல்லி:

  பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மாநிலங்களவையில், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய  அரசு அறிவித்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பினர். இதை தொடர்ந்து ரூபாய் நோட்டு தொடர்பான விவாதத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

  விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான அறிவிப்பை கடுமையாக விமர்சித்தனர். மேலும், இதன்மூலம் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், கருப்புப் பணம் பதுக்கி வைப்போர் பாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

  இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, ‘ரூபாய் நோட்டு மாற்றம் செய்யும் நடவடிக்கை தாய்மார்கள் குழந்தையை பெற்றெடுப்பதுபோன்றது. இந்த தற்காலிக வலியானது, நீண்ட காலம் நன்மை தரும். ரூபாய் நோட்டு தடையானது அதிக அளவிலான கள்ளநோட்டுக்கள், தீவிரவாத நிதிக்கு முடிவு கட்டும். இது கருப்பு பணத்திற்கு எதிரான போர். இதில் எதிர்க்கட்சிகள் எந்த பக்கம் என்பதை அவர்கள் தேர்வு செய்யவேண்டும்’ என்றார்.

  பாராளுமன்றத்தில் நாளையும் இது தொடர்பான விவாதம் தொடர்ந்து நடைபெறும்.
  Next Story
  ×