என் மலர்

  செய்திகள்

  பிளஸ்-2 மாணவியை கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்
  X

  பிளஸ்-2 மாணவியை கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளஸ்-2 மாணவியை கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

  திருவனந்தபுரம்:

  திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு பகுதியில் உள்ள தலித்காலனியைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி தம்பதியின் 17 வயது மகள் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற இவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் மகளை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

  இதனால் மகள் மாயமானது பற்றி போத்தன்கோடு போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

  இந்த நிலையில் நேற்று அந்த மாணவி திடீரென வீடு திரும்பினார். மகளிடம் அவர் மாயமானது பற்றி பெற்றோர் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

  அந்த மாணவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து உள்ளனர்.

  அப்போது அந்த வாலிபர் திருமண ஆசை காட்டி மாணவியை கற்பழித்து உள்ளார். மேலும் தனது நண்பர்களான ஆட்டோ டிரைவர், கூலித்தொழிலாளி ஆகியோருக்கும் அந்த மாணவியை விருந்தாக்கி உள்ளார்.

  அந்த மாணவியை மிரட்டி ஆட்டோவில் கடத்தி பத்தனம்திட்டை, செங்கனூர் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றும் அவர்கள் 3 பேரும் உல்லாசம் அனுபவித்து உள்ளனர்.

  மேலும் கன்னியாகுமரிக்கும் அந்த மாணவியை காதலன் அழைத்து வந்து உள்ளார். இங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி மாணவியை பலவந்தமாக கற்பழித்து உள்ளார்.

  கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு டாக்டரின் ஆஸ்பத்திரிக்கும் அந்த மாணவியுடன் சென்ற காதலன் தனது காதலியை டாக்டருக்கும் விருந்தாக்கிய கொடுமையும் நடந்துள்ளது.

  இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக காதலன் மிரட்டியதால் தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த மாணவி வெளியில் சொல்ல முடியாமல் தவித்து உள்ளார்.

  இந்த நிலையில் தான் அந்த மாணவியை காதலனும் அவரை சீரழித்த மற்ற 3 பேரும் மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் சென்று அவரது வீடு அருகே விட்டு விட்டு சென்று உள்ளனர்.

  மகள் கூறி இந்த தகவல்களை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

  இது பற்றி போத்தன்கோடு போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன், கன்னியாகுமரி டாக்டர், காதலனின் நண்பர்கள் 2 பேர் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

  மேலும் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  மாணவியை கற்பழித்த கன்னியாகுமரி டாக்டரை கைது செய்ய கேரள போலீசார் கன்னியாகுமரி வந்து விசாரணை நடத்தவும் முடிவு செய்து உள்ளனர்.

  Next Story
  ×