என் மலர்

  செய்திகள்

  பழைய நோட்டுகளை மாற்ற முடியாததால் 250 ரூபாயுடன் கெஜ்ரிவால் தவிப்பு
  X

  பழைய நோட்டுகளை மாற்ற முடியாததால் 250 ரூபாயுடன் கெஜ்ரிவால் தவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் வெறும் 250 ரூபாயுடன் தவித்து வருவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
  புதுடெல்லி:

  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

  நாடெங்கும் சில்லரை ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விவாதிக்க அவர் இன்று டெல்லி சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

  இந்த நிலையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘கருப்பு பணத்தை ஒழிக்க கொடுக்கப்பட்டுள்ள கசப்பு மருந்து இது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால் அவர் ஏழைகளுக்கு வி‌ஷத்தைத்தான் கொடுத்துள்ளார்’’ என்றார்.

  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தன்னையும் மிகவும் பாதித்து இருப்பதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார். அப்போது ஒரு நிருபர் உங்களிடம் தற்போது எவ்வளவு ரூபாய் உள்ளது என்று கேட்டார்.

  அதற்கு கெஜ்ரிவால், ‘‘என்னிடம் ரூ.250 தான் உள்ளது. வேறு சில்லரை நோட்டுகள் கிடைக்கவில்லை’’ என்றார்.

  அதோடு தனது பையில் இருந்து 250 ரூபாயை எடுத்து நிருபர்களிடம் காட்டினார்.
  Next Story
  ×