என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகிழக்கு மாநிலங்களில் இன்று திடீர் நிலநடுக்கம்: மக்கள் பீதி
    X

    வடகிழக்கு மாநிலங்களில் இன்று திடீர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

    நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    வங்காளதேசம் நாட்டின் எல்லையோரமுள்ள அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் மாவட்டத்தை மையமாக கொண்டு இன்று காலை 7.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அசாம், மேகாலயா, மிசோரம், திரிப்புரா, மணிப்புரா ஆகிய மாநிலங்களில் அதிர்வை ஏற்படுத்தியது.

    இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் ரிக்டர் அளவுக்கோலில் 5 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து மற்றொரு நிலநடுக்கமும் நிகழலாம் என இங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    புவியியல் அமைப்பின்படி, அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் ஐந்தாம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் மேற்கண்ட வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×