search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண தட்டுப்பாடு: அனைத்து கட்சியினருடன் ஜனாதிபதி ஆலோசனை?
    X

    பண தட்டுப்பாடு: அனைத்து கட்சியினருடன் ஜனாதிபதி ஆலோசனை?

    பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின்னர் நாட்டில் நிலவிவரும் பண தட்டுப்பாடு மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளை பெற முடியாமல் அவதிப்படும் மக்களின் நிலை தொடர்பாக அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சம்மதம் தெரிவித்துள்ளதாக மம்தா பாணர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
    கொல்கத்தா:

    கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

    கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் கடந்த 6 நாட்களாக கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

    மத்திய அரசிம் இந்த திடீர் அறிவிப்புக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பாணர்ஜி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின்னர் நாட்டில் நிலவிவரும் பண தட்டுப்பாடு மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளை பெற முடியாமல் அவதிப்படும் மக்களின் நிலை தொடர்பாக அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சம்மதம் தெரிவித்துள்ளதாக மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பாணர்ஜி இன்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மம்தா பாணர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளதாவது:-

    மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் சராசரி மக்கள் அனுபவித்துவரும் வேதனையை எனது தொலைபேசி அழைப்பை ஏற்று, என்னுடன் பேசிய மேதகு குடியரசு தலைவரிடம் விளக்கி கூறினேன்.

    வரும் 16 அல்லது 17 தேதியில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் இதுதொடர்பாக விரிவாக ஆலோசிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ள அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×