என் மலர்

    செய்திகள்

    ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பேசுகிறார்: பா.ஜனதா பதிலடி
    X

    ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பேசுகிறார்: பா.ஜனதா பதிலடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஊழல்வாதிகளின் செய்தி தொடர்பாளராக கெஜ்ரிவால் செயல்படுவதாக பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    ரூ.500, ரூ.1000 செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பதில் மிகப்பெரிய ஊழல் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

    இதற்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. டெல்லியில் அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊழல்வாதிகளின் செய்தி தொடர்பாளராக கெஜ்ரிவால் செயல்படுகிறார். எனவே தான் ஊழல் வாதிகளுக்கு ஆதரவாக பரிந்து பேசுகிறார்.

    மக்கள் அனைவரும் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறார்கள். அரசின் உத்தரவால் ராகுல் காந்தி, கெஜ்ரிவால் போன்றோர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போலும், அதனால் தான் அவர்கள் எதிர்க்கின்றனர். இது பிரதமரின் தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

    இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    Next Story
    ×