என் மலர்

    செய்திகள்

    1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: பிரதமருக்கு ஆம் ஆத்மி கடிதம்
    X

    1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: பிரதமருக்கு ஆம் ஆத்மி கடிதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஆம் ஆத்மி கடிதம் கடிதம் எழுதியுள்ளது.
    புதுடெல்லி:

    1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கடிதம் கடிதம் எழுதியுள்ளது.

    இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் ஜர்னைல் சிங் கூறுகையில்:-

    மோடி இந்த வழக்கின் மறு விசாரணையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் தொடங்க வேண்டும். இல்லையேல் ஆம் ஆத்மி அரசாங்கத்தை செய்ய விட வேண்டும்.

    ஆம் ஆத்மி வரும் வியாழக் கிழமை மொஹாலியில் 1984-ம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரத் போராட்டத்தை மேற்கொள்கிறது.

    ஆம் ஆத்மி அரசாங்கம் தனது முதல் கட்ட 49 நாள் ஆட்சியின் போது 1984 படுகொலை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.

    ஆனால், புதிய அரசாங்கம் மீண்டும் அமைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி மத்திய அரசு தனது சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது” என்றார்.

    முன்னதாக இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவரது பாதுகாவலராக இருந்த சீக்கியர் ஒருவரால் 1984ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அப்போது, சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. அதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
    Next Story
    ×