என் மலர்
செய்திகள்

சிமி தீவிரவாதிகள் தப்பியபோது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை
போபால் சிறையில் சிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றபோது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 8 சிமி தீவிரவாதிகள் சிறை பாதுகாவலரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகவும், பின்ன் அவர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ பதிவு ஒன்று வெளியானது. ஆனால், அதன் உண்மைத் தன்மையை விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீடியோவை அடுத்து என்கவுண்டர் தொடர்பாக சந்தேகங்கள் வலுத்தது.
இந்நிலையில் போபால் சிறையில் சிமி தீவிரவாதிகள் தப்பியபோது சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்றும், இதனை சாதகமாக பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகள் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு தப்பினர் என்று கூறப்படும் நிலையில் சிறையில் இருந்த சி.சி.டி.வி.க்கள் குறித்து அதிகாரிகள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. சிறை உடைப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் உளவுப்பிரிவு விசாரணை நடத்திவருகிறது. சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து 1988-ம் ஆண்டைய ஐபிஎஸ் அதிகாரி சுதீர் ஷாய் இப்போது சிறைத்துறை கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பொறுப்பேற்றுள்ளார். இதுதொடர்பாக அவருடைய கருத்தை பெறமுடியவில்லை.
ஆனால் போபால் மத்திய சிறையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்பது சிமி பயங்கரவாதிகளுக்கு தெரியும் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் முன்னாள் காவல்துறை டைரக்டர் ஜெனரல் நந்தன் துபே, சிசிடிவி விவகாரத்தை ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
மாநிலத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த சிறையில் சிசிடிவி கேமராக்கள் முழுவதுமாக செயல்படவில்லை என்பது பாதுகாப்பில் குறைபாடு உள்ளது என்பதை காட்டுகிறது என்று சிறைத்துறை நிபுணர்கள் கூறிஉள்ளனர். குறிப்பாக, சிமி தீவிரவாதிகள் சிறையில் தங்களுடைய ‘டங் கிளீனரில்’ உள்ள உலோக தகடை கொண்டு போலியான சாவிகளை தயாரித்தாக வெளியான தகவலையடுத்து இந்த சந்தேகம் வலுத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story