என் மலர்

    செய்திகள்

    டாடா குழும எதிர்கால வெற்றிக்கு மிஸ்திரி நீக்கம் அவசியம்: ரத்தன் டாடா
    X

    டாடா குழும எதிர்கால வெற்றிக்கு மிஸ்திரி நீக்கம் அவசியம்: ரத்தன் டாடா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டாடா குழுமத்தின் எதிர்கால வெற்றிக்கு மிஸ்திரியின் நீக்கம் அவசியம் என ரத்தன் டாடா தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் டாடா. இந்த குழுமத்திற்கு உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பலவிதமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பொறுப்பு வகித்தார். அதன்பின்னர் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகிக் கொள்ள, சைரஸ் மிஸ்திரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் தலைமை பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அந்த குழுமத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களால் சைரஸ் மிஸ்திரிக்கு சிக்கல் உருவானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைரஸ் கடந்த அக்டோபர் 24-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார்.

    சைரல் மிஸ்திரி நீக்கத்தைத் தொடர்ந்து ரத்தன் டாடா டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுபேற்றுக்கொண்டார். புதிய தலைவரை தேர்வுக் குழு முடிவு செய்யும் வரை ரத்தன் டாடா இடைக்கால தலைவராக நீடிப்பார்ன் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் டாடா குழுமத்தின்  எதிர்கால வெற்றிக்கு மிஸ்திரியின் நீக்கம் அவசியம் என ரத்தன் டாடா தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரத்தன் டாடா " டாடா குழுமத்தின் நிலைத்தன்மை மற்றும் உறுதியான தலைமைக்கு பணியாற்றுவேன். மிஸ்திரியை நீக்கும் கடினமான முடிவை மிகக் கவனமாக டாடா எடுத்தது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகே மிஸ்திரியை நீக்க முடிவெடுக்கப்பட்டது" என டாடா நிறுவன ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.
    Next Story
    ×