என் மலர்
செய்திகள்

காளஹஸ்தி கோவிலில் கொடி மரத்தில் தங்க முலாம்பூச பெண் எம்.எல்.ஏ. ரூ.4 கோடி நன்கொடை
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் புகழ் பெற்ற வாயு லிங்கஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி வாயு லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வருகிற பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவிலில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காளஹஸ்தீஸ்வரர், ஞானப் பிரசுனாம்பிகை சந்நிதி முன்னுள்ள கொடி மரத்தில் ரூ.5 லட்சம் செலவில் செப்புத் தகடுகள் பொருத்தும் பணி முடிவடைந்தது. இந்த பணிகளை அங்குள்ள ஊரந்தூர் பக்தர்கள் மேற்கொண்டனர். இதற்கு, தங்க முலாம் பூசும் பணி அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
ரூ.4 கோடி செலவில் தங்க மூலாம் பூசப்படுகிறது. இதற்கான செலவு ரூ.4 கோடியை சித்தூர் எம்.எல்.ஏ. சத்யபிரபா ஏற்றுள்ளார். இப்பணி, ஒரு மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.