என் மலர்

  செய்திகள்

  புவனேஸ்வர்: தனியார் மருத்துவமனை தீவிபத்தில் 22 பேர் உயிரிழப்பு
  X

  புவனேஸ்வர்: தனியார் மருத்துவமனை தீவிபத்தில் 22 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
  புவனேஸ்வர்:

  ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீ பிடித்தது.

  உடனடியாக 5 தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

  இந்த தீ விபத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக குர்தா மாவட்ட கலெக்டர் நிரஞ்சன் சாகு தெரிவித்தார். இருப்பினும் இந்த விபத்தில் 22 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  மருத்துவமனை தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் புவனேஸ்வர் நகரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
  Next Story
  ×