என் மலர்

  செய்திகள்

  ஐக்கிய ஜனதாதள தலைவராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு
  X

  ஐக்கிய ஜனதாதள தலைவராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவராக பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் 2–வது முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
  பாட்னா:

  ஐக்கிய ஜனதாதள கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் என்ற இடத்தில் தொடங்கியது. இதில் 23 மாநிலங்களில் இருந்து வந்த கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

  முதல் நாள் கூட்டத்தில், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவராக பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் 2–வது முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை சேர்த்து வலிமையான புதிய அணியை உருவாக்கும் அதிகாரம் நிதிஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.

  இந்த தகவலை ஐக்கிய ஜனதாதள கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.தியாகி நிருபர்களிடம் தெரிவித்தார்.
  Next Story
  ×