என் மலர்

  செய்திகள்

  இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிப்பா? வெளியுறவு அமைச்சகம் பதில்
  X

  இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிப்பா? வெளியுறவு அமைச்சகம் பதில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் சீன தயாரிப்புகளை புறக்கணிப்பது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை என வெளியுறவு அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது.
  பெனாலிம்:

  பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுவதால், இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்துள்ளார்.

  அவரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நிருபர்களிடம் விளக்கினார். அவரிடம் சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்கும் சூழல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

  இதற்கு பதிலளித்த அவர், 'சீன தயாரிப்புகளை புறக்கணிப்பது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். பொருளாதார பிரச்சினைகளை முதன்மையாக கொண்டே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் தற்போது சர்வதேச மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்தே விவாதிக்கப்பட்டு உள்ளது. அடுத்த அமர்வின்போது பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதித்து, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக செயல்திட்டம் வகுக்கப்படும் என நம்புகிறோம்' என்றார்.
  Next Story
  ×