என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மூத்த மகள் ஓடியதால் அவமானம்: மனைவி, 2-வது மகளுடன் வியாபாரி தற்கொலை
Byமாலை மலர்16 Oct 2016 10:31 AM GMT (Updated: 16 Oct 2016 10:31 AM GMT)
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மூத்த மகள் காதலருடன் ஓடியதால் அவமானம் அடைந்த வியாபாரி, மனைவி, மகளுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வெள்ளனூரை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 50) வியாபாரி. இவரது மனைவி சுஜாதா (42). இவர்களது 2-வது மகள் லட்சுமி (23). இன்று காலை திருப்பணித்துறை ரெயில்வே தண்டவாளம் அருகே 3 பேரும் நின்றனர்.
அப்போது திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்ல கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் கோவை நோக்கி வந்தது. திடீரென 3 பேரும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
3 பேரின் உடல்களும் சில அடிதூரம் இழுத்துச் சென்றது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது 3 பேரின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக சிதறி கிடந்தது. இது குறித்து திருப்பணித்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட சச்சிதானந்தத்தின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது மூத்த மகள் ஜோதிலட்சுமிக்கு கடந்த மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜோதிலட்சுமி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
திருமணம் நிச்சயம் செய்த பின்னர் வேறு வாலிபருடன் ஓட்டம் பிடித்து காதல் திருமணம் செய்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சச்சிதானந்தம் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினர். அவமானம் அடைந்த சச்சிதானந்தம் தனது மனைவி, மகளுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
உடல் பாகங்களை சேகரித்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
×