search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு
    X

    பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு

    எல்லையில் ஒரு வாரத்துக்குப் பின் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
    ஜம்மு:

    பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் அடிக்கடி காஷ்மீரில் இந்திய எல்லையில் தாக்குகுதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் அழித்து தரை மட்டமாக்கிய போது பாகிஸ்தான் அத்துமீறலில் மீண்டும் ஈடுபட்டது.

    இந்தியப் படைகளும் பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் படைகள் பின் வாங்கியது. இந்த நிலையில் ஒரு வாரத்துக்குப்பின் பாகிஸ்தான் மீண்டும் எல்லையில் இன்று அத்து மீறலில் ஈடுபட்டது.

    காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவுசெரா செக்டார் பகுதியில் 4 இந்திய ராணுவ நிலைகள் மீது அத்துமீறி துப்பாக்கியால் சுட்டது. சிறியவகை ஆயுதங்களால் இந்த தாக்குதலை நடத்தியது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

    இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்குப் பின் 25 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்து மீறலில் ஈடுபட்டு இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×