என் மலர்

  செய்திகள்

  ரூ.200 கோடி வசூல்: எம்.எஸ். தோனி - சொல்லப்படாத கதை திரைப்படம் புதிய சாதனை
  X

  ரூ.200 கோடி வசூல்: எம்.எஸ். தோனி - சொல்லப்படாத கதை திரைப்படம் புதிய சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளின் கேப்டனான எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ’எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்து தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறது.

  கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான இந்தப் படம் உள்ளூர் சந்தையில் ரூ.175.7 கோடி வசூல் செய்துள்ளது.  வெளிநாட்டு சந்தையில் ரூ.28.63 கோடியும் மற்றும் உலக அளவில் ரூ.200.81 கோடியும் வசூல் செய்துள்ளது.  நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தினை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது.  அதனுடன் தோனியின் நீண்டகால நண்பரான அருண் பாண்டேவும் இணைந்து இதனை தயாரித்துள்ளார்.

  இந்த படம் பற்றி அருண் பாண்டே கூறும்பொழுது, தோனியை கிரிக்கெட்டின் ஒவ்வொரு பெரிய போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஒரு வீரராகவே மக்களுக்கு தெரியும்.  ஆனால் அவரது போராட்டங்கள் மற்றும் அவற்றினை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பது பற்றி ஒருவருக்கும் தெரியாது.

  ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வந்தது வரை அவர் பலரையும் கவர்ந்துள்ளார்.  ஆனால் உண்மையான தோனியை ஒருவருக்கும் தெரியாது. எனது வாழ்வில் 2ல் இருந்து 3 நண்பர்கள் வரை இருக்கிறார்கள்.  அவர்களில் தோனியும் ஒருவர் என கூறியுள்ளார்.

  ஒருவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் ஆக்கப்பட்டு இந்தியாவில் அதிகமான தொகையை வசூல் செய்த சாதனையையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது.
  Next Story
  ×