என் மலர்

    செய்திகள்

    7 பேரை கத்தியால் குத்திய போதை வாலிபரை அடித்து கொன்ற பொதுமக்கள்
    X

    7 பேரை கத்தியால் குத்திய போதை வாலிபரை அடித்து கொன்ற பொதுமக்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விசாகப்பட்டினம் அருகே குடிபோதையில் 7 பேரை கத்தியால் குத்தி கடும் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நகரி:

    விசாகப்பட்டினம் அடுத்த கஞ்சரப்பாளையம் மேட்லி மெயின் ரோட்டில் உள்ள மதுபாரில் பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது குடித்தார்.

    பின்னர் போதையில் இரண்டு கத்திகளுடன் ரோட்டுக்கு வந்து நடந்து செல்பவர்களை கண்மூடித்தனமாக குத்தி காயப்படுத்தினார்.

    பொதுமக்களை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக குத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அந்த வாலிபர் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் யாரும் நடந்து செல்லவில்லை.

    சில இளைஞர்கள் தைரியமாக அந்த போதை வாலிபரை மடக்கி பிடித்து கத்திகளை பிடுங்கினர். அதன்பின் அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

    உடனே போலீசார் அவனையும், படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே போதை வாலிபர் இறந்தார். அவரது பெயர் விவரம் எதுவும் தெரியவில்லை.

    கத்தி குத்தில் காயம் அடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    Next Story
    ×