என் மலர்

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள்

    மும்பை விமான நிலையத்தில் 199 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மும்பை விமான நிலையத்தில் 199 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மும்பை:

    மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக 2 பேர் வந்தனர். அவர்கள் கையில் 4 பெரிய அட்டை பெட்டிகள் வைத்திருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த அட்டைபெட்டிகளை வாங்கி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பெட்டிகளுக்கு ஏராளமான நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த ஆமைகளை பறிமுதல் செய்தனர். 4 அட்டை பெட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 199 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

    பின்னர் இருவரும் சகார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்களது பெயர் மர்வான் அலிஹசன், சுல்தான் அலிஅல்பகி என்பது தெரியவந்தது.

    அவர்கள் ஆமைகளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதை ஒப்புக் கொண்டனர். போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×