search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர போராட்ட தியாகிகளின் பென்ஷன் தொகையை 20 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல்
    X

    சுதந்திர போராட்ட தியாகிகளின் பென்ஷன் தொகையை 20 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வெள்ளையர் ஆட்சியை எதிர்த்தும் நாட்டின் விடுதலைக்காகவும் போராடி, சிறைசென்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் பென்ஷன் தொகையை 20 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    வெள்ளையர் ஆட்சியை எதிர்த்தும் நாட்டின் விடுதலைக்காகவும் போராடி, சிறைசென்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் பென்ஷன் தொகையை 20 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    டெல்லி செங்கோட்டையில் கடந்த 15-8-2016 அன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட தியாகிகளின் பென்ஷன் 20 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி,  தியாகிகளின் பென்ஷன் தொகையை 20 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    பென்ஷன் தொகையை சேர்த்து அகவிலைப்படி தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இதன்மூலம், இதுவரை மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாயை பென்ஷன் தொகையாக பெற்றுவந்த சுதந்திர போராட்ட தியாகிகள் அடுத்த மாதத்தில் இருந்து இனி 30 ஆயிரம் ரூபாயும், அதன் அடிப்படையிலான அகவிலைப்படியும் பெறுவார்கள் என்பது, குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×