என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி: மண்டியாவில் இன்று முழு அடைப்பு

பெங்களூர்:
தமிழகத்துக்கு இன்று முதல் 27-ந் தேதி வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன.
மண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று மண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
மண்டியாவில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறைவிடப்பட்டன. கடைகள், வணிக வளாகங்கள், மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பஸ்கள் ஓடவில்லை.
இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும், அசம் பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் முழுவீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மண்டியா மாவட்டமே இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
கிருஷ்ணராஜசாகர் அணை மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. முழு அடைப்பையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கிருஷ்ணராஜசாகர் அணையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.