என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாபில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 8 மாணவர்கள் பலி
    X

    பஞ்சாபில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 8 மாணவர்கள் பலி

    பஞ்சாபில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 8 மாணவர்கள் பலியாயினர். மேலும் 17 பேர் காயம் அடைந்தனர்.
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லையையொட்டி தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்ததும், சுற்றுவட்ட கிராமங்களில் படிக்கும் மாணவர்கள் 37 பேரை அவர்களின் வீடுகளில் விடுவதற்காக இந்த பள்ளியின் பஸ் புறப்பட்டுச் சென்றது. வழியில், ஒரு குறுகிய பாலத்தில் அந்த பஸ் திடீரென நின்றது. இதனால் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்க முயன்றார். அப்போது பஸ், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழ் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 8 மாணவர்கள் பலியாயினர். மேலும் 17 பேர் காயம் அடைந்தனர். பலியான மற்றும் காயம் அடைந்த அனைவருமே 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் ஆவர். சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய பஸ் டிரைவர் சரண்ஜித் சிங் நேற்று முன்தினம்தான் அந்த பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் மற்றும் பஸ் உரிமையாளர் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவான பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×