என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
டெல்லியில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை படுகொலை: அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு
By
மாலை மலர்21 Sep 2016 12:28 AM GMT (Updated: 21 Sep 2016 12:28 AM GMT)

டெல்லியில் பட்டப்பகலில் ஒருதலை காதலில் பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து டெல்லி போலீசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
புதுடெல்லி:

சென்னை பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி, சோனாலி, நவீனா, பிரான்சினா, தன்யா என தொடர்ந்து பெண்கள் ஒருதலை காதலில் கொல்லப்பட்டுள்ள சம்பவங்கள், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை ஒருவர் 22 முறை கத்தியால் குத்தி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகரை உலுக்கி உள்ளது.
டெல்லி வடக்கு பகுதியில் உள்ள புராரி சந்த் நகரை சேர்ந்தவர் நரேஷ். இவரது மகள் கருணா (வயது 21). இவர், அங்கு நாவல் ரீச்சஸ் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.
நேற்று காலை 9 மணிக்கு அவர் புராரி லேபர் சவுக் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ஒருவர் அவரை திடீரென வழிமறித்து கையைப் பிடித்து இழுத்தார். ஆனால் அவர் தன்னைக் காப்பாற்றும் முயற்சியில் கீழே விழுந்தார்.
உடனே அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்த தொடங்கினார். கருணா உதவி கேட்டு அலறினார்.
அதை, அந்த சாலையின் வழியே இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் என பலரும் பார்த்தனர். ஆனால் யாரும் நின்று உதவ முன்வரவில்லை. ஒருவர் மட்டும் நெருங்க முற்பட்டு, பின்னர் அவரும் விலகிச் சென்று விட்டார்.
அதற்குள் கருணா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டது என அறிவித்தனர். அவரது உடலில் 22 முறை கத்தியால் குத்திய காயங்கள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே கருணாவை குத்திக்கொலை செய்த நபர், அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அவரை அந்த பகுதியில் சென்றவர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரைப் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம், தலைநகரை உலுக்கியது. இது குறித்த வீடியோ பதிவுகள் டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஆசிரியை கருணாவை குத்தி கொலை செய்த நபர், சுரேந்தர் சிங் (34) என தெரிய வந்துள்ளது.
இவர் திருமணமாகி விவாகரத்து ஆனவர் என கூறப்படுகிறது. அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கருணா பயிற்சி பெற்று வந்திருக்கிறார். அப்போது அவரை சுரேந்தர் சிங் காதலித்து, பின் தொடர்ந்து வந்திருக்கிறார். ஆனால் அந்த காதலை கருணா ஏற்கவில்லை.
ஆனாலும் அவரை சுரேந்தர் சிங் சுமார் ஒரு வருட காலமாக பின்தொடர்ந்து வந்துள்ளார். தொலைபேசியில் பேசியும் அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் 6 மாதங்களுக்கு முன்பு கருணாவின் தந்தை நரேஷ், போலீசில் புகார் செய்தார்.
அதைத் தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். சுரேந்தர் சிங்கையும் எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதைத் தொடர்ந்து அவர் கருணாவை பின்தொடர்வதை நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில்தான் நேற்று திடீரென அவர், கருணாவை பின்தொடர்ந்து வந்து குத்தி கொலை செய்து விட்டார். இது தலைநகரை உலுக்கி உள்ளது.
இந்த படுகொலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிரியை கருணா படுகொலை செய்யப்பட்டதின் பின்னணி என்ன என்பது குறித்து டெல்லி போலீசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.
இதுபற்றி மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி கிரண் ரிஜிஜு நிருபர்களிடம் பேசும்போது, “நடந்துள்ள சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது” என கூறினார்.
இந்த சம்பவத்தில் போலீசாரை சாடி டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தொல்லை செய்வதைவிட, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் டெல்லி போலீசார் கவனம் செலுத்த வேண்டும்” என கூறி உள்ளார்.

Next Story
×