என் மலர்

  செய்திகள்

  குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்: காங்கிரஸ் கருத்துக் கணிப்பில் தகவல்
  X

  குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்: காங்கிரஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத்தில் 97 தொகுதிகளில் பா.ஜ.க. வுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ஆமதாபாத்:

  குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2017) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

  குஜராத் மாநிலத்தை பா.ஜ.க.வின் கோட்டையாக மாற்றிய மோடி, பிரதமர் பதவியை 2014-ம் ஆண்டு ஏற்றதும், அம்மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பிறகு ஆனந்திபென் முதல்வரானதில் இருந்து பா.ஜ.க.வில் சலசலப்பு ஏற்பட்டது.

  குஜராத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் விலகினார். புதிய முதல்-மந்திரியாக விஜய்ரூபானி பதவி ஏற்றார்.

  இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. குஜராத் சட்டசபையில் மொத்தம் 182 தொகுதி இடங்கள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க 92 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

  கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பா.ஜ.க. 123 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 56 இடங்களே கிடைத்தது. தற்போது மோடி இல்லாத நிலையில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி பிரத்யேகமாக கருத்துக் கணிப்பு நடத்தியது.

  நேற்று அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் 97 தொகுதிகளில் பா.ஜ.க. வுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 97 தொகுதிகளில் 52 தொகுதிகளில் பா.ஜ.க. 100க்கு 100 சதவீதம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

  காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட சற்று கூடுதல் இடம் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பை ராகுல்காந்தி பார்வைக்கு குஜராத் மாநில காங்கிரசார் அனுப்பி உள்ளனர்.

  குஜராத்தில் ஒவ்வொரு பூத் அளவிலும் பா.ஜ.க. மிகவும் வலிமையாக இருப்பது கருத்துக் கணிப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அத்தகைய வலிமையான ஒருங்கிணைப்பு குஜராத் காங்கிரசில் இல்லை என்று கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
  Next Story
  ×