search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் முன்னாள் அமைச்சர் கைது: போலீஸ்காரர்களை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு
    X

    ராஜஸ்தானில் முன்னாள் அமைச்சர் கைது: போலீஸ்காரர்களை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு

    ராஜஸ்தானில் போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குத்தாவின் ஊருக்கு அருகில் கடந்த சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ராஜேந்திர குத்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். விபத்து குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் அமைச்சர் விசாரித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு வந்த போலீசார், விபத்தில் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். இதனை அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பிரச்சினை ஏற்பட்டது. இருதரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி முன்னாள் அமைச்சர் தேவேந்திர குத்தா உள்ளிட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் மற்றவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், குத்தா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் குத்தா இணை அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×