என் மலர்

    செய்திகள்

    பீகார் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி
    X

    பீகார் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பீகார் மாநிலம் மதுபானி அருகே தனியார் பேருந்து குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலம் சிதாமர்ஹியில் இருந்து மதுபானி நோக்கி 3௦ பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பசிதா என்ற கிராமத்தினருகே கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்தது. பேருந்தில் சென்ற அனைவரும் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் 4 பேர் நீந்தி கரைசேர்ந்தனர்.

    தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 14 பேரின் உடல்களை மீட்டனர். 12 பேரை உயிருடன் மீட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பர்மர் தெரிவித்தார்.

    பேருந்து வளைவில் திரும்பும்போது டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×