என் மலர்

  செய்திகள்

  பீகார்: கால்வாய்க்குள் 4 தலையில்லா பிரேதங்கள் கண்டெடுப்பு
  X

  பீகார்: கால்வாய்க்குள் 4 தலையில்லா பிரேதங்கள் கண்டெடுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகார் மாநிலம், பேகுசராய் மாவட்டத்தில் ரெயில் நிலையம் அருகேயுள்ள ஒரு கால்வாயில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இரண்டு இளம்பெண்கள் உள்பட நான்கு பேரின் பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  பாட்னா:

  பீகார் மாநிலம், பேகுசராய் மாவட்டம், சன்ஹா ரெயில் நிலையத்தின் ஓரம் இன்று சில பெண்கள் மாட்டு தீவனத்துக்காக புல் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு கால்வாய்க்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இரண்டு இளம்பெண்கள், ஒரு வாலிபர் உள்பட நான்கு பேரின் பிரேதங்கள் கிடப்பதைக் கண்ட ஒரு பெண் அதிர்ச்சி அடைந்தார்.

  இதுதொடர்பான, தகவல் அறிந்து விரைந்துவந்த சாஹேப்பூர் கமால் பகுதி போலீசார், அந்த பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கொல்லப்பட்டவர்கள் யார்? இந்த கொலைக்கான பின்னணி என்ன? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

  இச்சம்பவம் பேகுசராய் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×