search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு மெஹ்பூபா முப்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி
    X

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு மெஹ்பூபா முப்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உடல்களுக்கு காஷ்மீர் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உடல்களுக்கு காஷ்மீர் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    காயம் அடைந்த 19 ராணுவ வீரர்களுக்கு படாமி பாக் கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் உரி தாக்குதலில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர், காஷ்மீர் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோர் நேற்று படாமி பாக் கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களை சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.

    இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், படாமி பாக் கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு இன்று காலை சென்ற மெஹ்பூபா முப்தி, பலியான வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
    Next Story
    ×