என் மலர்

    செய்திகள்

    தீவிரவாதிகளையும், பின்னணியில் இருப்பவர்களையும் தோற்கடிப்போம்: காஷ்மீர் உரி தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்
    X

    தீவிரவாதிகளையும், பின்னணியில் இருப்பவர்களையும் தோற்கடிப்போம்: காஷ்மீர் உரி தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீர் உரி தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளையும், பின்னணியில் இருப்பவர்களையும் தோற்கடிப்போம் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்
    புதுடெல்லி:

    காஷ்மீர் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் புகுந்த 4 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 17 ராணுவ வீரர்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் உயிர் தியாகம் செய்துள்ள துணிச்சலான வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்தியா இதுபோன்ற தாக்குதல்களுக்கு பணிந்துவிடாது. நாம் இத்தகைய கொடுமையான தீவிரவாதிகளையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் தோற்கடிப்போம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
    Next Story
    ×