என் மலர்
செய்திகள்

காஷ்மீரில் தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ அதிகாரியிடம் இந்தியா கண்டனம்
காஷ்மீர் ராணுவ முகாமில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரியிடம் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது
புதுடெல்லி:
காஷ்மீர் ராணுவ முகாமில் நேற்று தாக்குதல் நடத்திய வெளிநாட்டு பயங்கரவாதிகள் 4 பேரும் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் கொண்டு வந்திருந்த சில பொருட்களும் பாகிஸ்தான் தயாரிப்பு என கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ நடவடிக்கைகள் பொது இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குனரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் கண்டனத்தையும், ஆழ்ந்த கவலையையும் அவர் தெரிவித்தார்.

Next Story