search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேற்பார்வைக் குழு: கர்நாடகாவில் பாதுகாப்பு தீவிரம்
    X

    டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேற்பார்வைக் குழு: கர்நாடகாவில் பாதுகாப்பு தீவிரம்

    டெல்லியில் இன்று காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    பெங்களூரு:

    தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தினமும் 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ந்தேதி வரை தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 12-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இதனால் அன்று பெங்களூரில் கலவரம் ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்த தனியார் பஸ்கள், லாரிகளுக்கு தீவைக்கப்பட்டன. பெங்களூரில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் கடைகள், ஓட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதேபோல், தமிழகத்தில் சிறிய அளவில் மட்டும் சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறித்து இறுதி முடிவு செய்யும்.

    காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த மண்டியா, சம்ராஜ் நகர், மசூரு, பெங்களூரு ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×