என் மலர்
செய்திகள்

மும்பை அருகே மீன்பிடி கப்பல் மூழ்கியது: 14 பேர் உயிருடன் மீட்பு
மும்பை அருகே மூழ்கிய மீன்பிடி கப்பலில் இருந்து 14 பேரை உயிருடன் மீட்டனர்.
மும்பை:
மும்பையில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தூரத்தில் தத்தா சாய் என்ற மீன்பிடி கப்பல் மீன்பிடித்து கொண்டு இருந்தது. அப்போது கடலில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது.
இதில், அந்த கப்பல் திடீரென மூழ்கியது. இந்த கப்பலில் 16 பேர் இருந்தனர். அவர்கள் கப்பலில் இருந்து குதித்து தண்ணீரில் தத்தளித்தனர்.
அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று இதை பார்த்து விட்டது. உடனே அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 14 பேரை அவர்கள் மீட்டனர். 2 பேரை காணவில்லை. அந்த இடத்துக்கு சமுத்திரா பர்காரி என்ற கடலோர பாதுகாப்பு படை கப்பல் அனுப்பப்பட்டது. அவர்கள், மாயமான 2 பேரை தேடி வருகிறார்கள்.
மீட்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 14 பேரையும் கடலோர காவல் படை கப்பலில் ஏற்றினார்கள். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story