search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேசில் நாட்டில் 208 மில்லியன் டாலருக்கு விமானம் வாங்கியதில் ஊழல்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது
    X

    பிரேசில் நாட்டில் 208 மில்லியன் டாலருக்கு விமானம் வாங்கியதில் ஊழல்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது

    பிரேசில் நாட்டு நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ’எம்ப்ராயர்’ ரக விமானம் வாங்க 208 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி தலைமையகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்துக்கு பிரேசில் நாட்டில் இருந்து 208 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் மூன்று நவீனரக ’எம்ப்ராயர்’ கண்காணிப்பு விமானங்களை வாங்க அடந்த 2008-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த இந்தியாவில் உள்ள சில முக்கிய புள்ளிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக ’எம்ப்ராயர்’ நிறுவனத்தின்மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இதில் தொடர்புடைய இந்தியாவில் உள்ள முக்கிய புள்ளிகள் யார்? என்பது தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என குரல் எழுந்தது. இதையடுத்து, விசாரணையில் இறங்கிய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரேசில் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இங்குள்ள சிலர் லஞ்சம் பெற்றதற்கான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதால் இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ராணுவ அமைச்சகம் கடந்த 14-ம் தேதி உத்தரவிட்டது.

    இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி தலைமையகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    Next Story
    ×