என் மலர்

  செய்திகள்

  இன்று 66-வது பிறந்தநாள்: தாயாரிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்
  X

  இன்று 66-வது பிறந்தநாள்: தாயாரிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று குஜராத்தில் வசித்துவரும் தனது தாயார் ஹிரா பென்னின் காலில் விழுந்து வணங்கி அவரிடம் ஆசி பெற்றார்.
  அகமதாபாத்:

  பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று குஜராத்தில் வசித்துவரும் தனது தாயார் ஹிரா பென்னின் காலில் விழுந்து வணங்கி அவரிடம் ஆசி பெற்றார்.

  பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டிலும் தனது பிறந்தநாளின்போது குஜராத் மாநிலம், காந்தி நகரில் தனது சகோதரருடன் வசித்துவரும் தாயார் ஹிரா பென்னை சந்தித்து அவரிடம் நல்லாசிகளை பெறுவது வழக்கம்.

  அவ்வகையில், ரய்சன் பகுதியில் உள்ள தனது சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டுக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடி, தற்போது 97 வயதாகும் தாயார் ஹிரா பென்னின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். அவரிடம் சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்த மோடி, அங்கிருந்து புறப்பட்டு குஜராத் மாநில கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

  அங்கிருந்து தஹோட் மாவட்டத்துக்கு செல்லும் அவர் பழங்குடியின மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை இன்று துவக்கி வைக்கிறார். பிற்பகலில் நவ்சாரி பகுதியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கும் பிரதமர் மோடி, இன்று மாலை குஜராத்தில் இருந்து டெல்லி திரும்புகிறார்.

  Next Story
  ×