search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் 2¼ கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்: மத்திய மந்திரி தகவல்
    X

    நாடு முழுவதும் 2¼ கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்: மத்திய மந்திரி தகவல்

    மாநிலங்களில் ரேஷன் கார்டுகளை ஆதார் மூலம் இணைக்கும் பணி தொடங்கப்பட்ட பின்னர் இதுவரை 2 கோடியே 33 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்
    புதுடெல்லி:

    பொது வினியோகத் திட்டம் மற்றும் அதன் கணினி மயமாக்க சீர்திருத்தம் குறித்த நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டை மூலம் கணினியில் இணைக்கும் முயற்சிக்கான நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. தற்போது 27 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் நியாயவிலைக்கடைகள் 100 சதவீதம் கணினி மயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலங்களில் ரேஷன் கார்டுகளை ஆதார் மூலம் இணைக்கும் பணி தொடங்கப்பட்ட பின்னர் இதுவரை 2 கோடியே 33 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. இதனால் ரூ.14 ஆயிரம் கோடி உணவு மானியத் தொகை உரியவர்களைச் சென்றடைந்து இருக்கிறது.

    பொது வினியோகத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் விதமாக சீர்திருத்தங்களை விரைவாக மாநிலங்கள் மேற்கொள்ளவேண்டும். இது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு தேவைப்படும் மிக முக்கிய அம்சம் ஆகும். இதனால் நாட்டில் தகுதியான 80 கோடி பேர் பயன் அடைவார்கள். தமிழ்நாடும், கேரளாவும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை விரைவில் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×