என் மலர்

    செய்திகள்

    டெல்லியில் பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை
    X

    டெல்லியில் பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெல்லியில் பெண் டாக்டர் ரித்து பங்கோட்டி தனக்குத்தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    புதுடெல்லி:

    டெல்லி கிழக்கு பகுதி ஐ.பி. விரிவாக்கம் குர்மஞ்சால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் பிரஜேஷ். இவருடைய மனைவி டாக்டர் ரித்து பங்கோட்டி (வயது 30). இவர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில் அவர், தனக்குத்தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.

    டாக்டருக்கும், அவருடைய கணவர் பிரஜேசுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    அதன்பேரில் டாக்டரின் கணவரிடம் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தற்கொலை செய்து கொண்ட டாக்டருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    Next Story
    ×