என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிடுவது சாத்தியமில்லை: பா.ஜ.க.
By
மாலை மலர்16 Sep 2016 2:27 PM GMT (Updated: 16 Sep 2016 2:27 PM GMT)

காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிடுவது சாத்தியமில்லை என கர்நாடக பா.ஜ.க. மாநிலத்தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது தமிழர்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் காவிரி நீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிடுவது சாத்தியமில்லை என்று கர்நாடக பா.ஜ.க மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடியூரப்பா செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில் ''காவிரி விவகாரத்தில் தோல்வியடைந்த அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்கிறது.
கர்நாடக அரசு இதனை வைத்து அரசியல் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காவிரி விவகாரத்தில் தலையிடுவது சாத்தியமில்லை. காவிரி விஷயத்தில் நீதிமன்றம் மூலமாக நீதியை பெற முயற்சி செய்ய வேண்டும்.
கர்நாடக மாநிலத்தின் அனைத்து கட்சி கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் மோகன் கடரகி கர்நாடக முதல்வர், காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் பேசும்போது, இவ்விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பிரதமரோ, மத்திய அரசோ இந்த விசயத்தில் தலையிட முடியாது என்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
கர்நாடக அரசு சட்டம்-ஒழுங்கை கடைபிடிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தவிர கர்நாடகாவில் உள்ள மற்ற கட்சிகள் பிரதமர் இந்த விசயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என விரும்புகின்றனர். இதேபோன்று தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கட்சிகளும் பிரதமர் காவிரி விவகாரத்தில் தலையிட வேண்டும் என விரும்புவது குறிப்பிடத்தக்கது.

Next Story
×