என் மலர்

  செய்திகள்

  டெல்லியில் 900 ஐ-போன்களை டிரக்குடன் திருடிய பலே கில்லாடிகள்: இருவர் கைது
  X

  டெல்லியில் 900 ஐ-போன்களை டிரக்குடன் திருடிய பலே கில்லாடிகள்: இருவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபோன்கள் திருடிய இரண்டு இளைஞர்களை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 2 கோடி மதிப்பிலான ஐபோன்கள் கைப்பற்றப்பட்டன.
  கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தெற்கு டெல்லியின் ஒக்லா பகுதியில் இருந்து தென்மேற்கு டெல்லியின் டவர்கா பகுதிக்கு ஐபோன்களுடன் சென்ற டிரக் ஒன்று கடத்தப்பட்டது.

  ஐபோன்கள் திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் இது தொடர்பாக அலம்( 24) அர்மன் (22) என்ற இரு இளைஞர்களை இன்று கைது செய்தனர்.

  இருவரிடமிருந்தும் 900 ஐபோன்கள் மற்றும் போன்கள் திருடப் பயன்படுத்திய கார் ஆகியவை மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.25 கோடியாகும்.

  இது தொடர்பாக டெல்லி போலீசார் கூறுகையில் ''இந்த ஐபோன்கள் திருட்டுக்கு உடந்தையாக இருந்த டிரக் டிரைவர்கள் போலா, பிரதீப் என்ற இருவரையும் கைது செய்துள்ளோம்.இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டனர்.
  தற்போது இந்த குழுவைச் சேர்ந்த மற்ற நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்'' என தெரிவித்தனர்.
  Next Story
  ×