search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் சந்திரபாபுநாயுடுவை கண்டித்து நடிகை ரோஜா தர்ணா
    X

    திருப்பதியில் சந்திரபாபுநாயுடுவை கண்டித்து நடிகை ரோஜா தர்ணா

    முழு அடைப்புப் போராட்டத்தின் போது கைது நடவடிக்கையை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பதியில் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து நடிகை ரோஜா தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    திருப்பதி:

    மத்திய அரசு, ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி கடந்த வாரம் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி சார்பில், திருப்பதியில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.

    இந்தப் போராட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கருணாகர்ரெட்டி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. டாக்டர் சிந்தாமோகன், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சியினரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது கைது நடவடிக்கையை மேற்கொண்ட ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவை கண்டித்து நேற்று திருப்பதியில் நகராட்சி அலுவலகம் முன்பு மேற்கண்ட எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் பங்கேற்றவர்கள், முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவை கண்டித்துப் பேசினார்கள். முழு அடைப்புப் போராட்டத்தின் போது கைது நடவடிக்கையை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தர்ணா போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×