search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகள் உயர்வு - டீசல் 31 காசுகள் குறைப்பு
    X

    பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகள் உயர்வு - டீசல் 31 காசுகள் குறைப்பு

    பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
    புதுடெல்லி:

    பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அவ்வகையில் நேற்று பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

    இந்த விலை உயர்வைத் தொடர்ந்து டெல்லி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.64.05-க்கு (பழைய விலை ரூ.63.47) விற்பனை செய்யப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதேபோல் முன்னர் ரூ.52.94 இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.52.63 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    கடந்த முதல் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் 3 ரூபாய் 38 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில் நேற்றைய மாற்றத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இதுவரை ஒரே மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ.3.96 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×