என் மலர்

  செய்திகள்

  கோவாவில் பா.ஜ.க.வுடன் மோதல்: தலைவர் நீக்கத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 400 பேர் விலகல்
  X

  கோவாவில் பா.ஜ.க.வுடன் மோதல்: தலைவர் நீக்கத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 400 பேர் விலகல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் 400 பேர் திடீரென விலகியுள்ளனர்.
  பானாஜி:

  கோவா மாநிலத்தில் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் தொடக்க பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை மேம்படுத்துவதாக அரசு மீது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியான கொங்கனி மற்றும் மராத்தியை பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதாக அவர்கள் கூறினார்கள்.

  இதையடுத்து கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும், பா.ஜ.க. தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 20-ந்தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா கோவா சென்றிருந்த போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அவருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள்.

  இந்த நிலையில் கோவா மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுபாஷ்வெளிங்கர், பா.ஜ.க. அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினார். பா.ஜ.க. அரசின் பயிற்று மொழி கொள்கையால் வருகிற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவும் என்றும் எச்சரித்தார்.

  இதற்கிடையே மாநில மொழியான கொங்கனியை காப்பாற்ற புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளிங்கர் அறிவித்தார். இது வரும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நிச்சயம் தோல்வியை ஏற்படுத்தும் என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

  இதனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சுபாஷ் வெளிங்கரை சமரசம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் நேற்று கோவா மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் பதவியில் இருந்து சுபாஷ் வெளிங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார். இதை அறிந்ததும் கோவா மாநில ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

  உடனடியாக இது பற்றி ஆலோசனை நடத்த பானாஜியில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சுமார் 6 மணி நேரம் அந்த கூட்டம் நடந்தது.

  கூட்டத்தில் பேசிய அனைவரும் வெளிங்கர் நீக்கத்தை கண்டித்தனர். பா.ஜ.க.வின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க இயலாது. அது வெட்ககரமானது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

  சுபாஷ் வெளிங்கர் நீக்கத்தை ரத்து செய்யும்வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பணிகளில் இருந்து விலகுவது என்றும் தீர்மானித்தனர். அதன்படி கோவா மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து 400 பேர் விலகி உள்ளனர்.

  இதனால் கோவாவில் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதல் ஏற்பட கோவா முன்னாள் முதல்-மந்திரியும் மத்திய மந்திரியுமான மனோகர் பாரிக்கர்தான் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
  Next Story
  ×