என் மலர்
செய்திகள்

டெல்லியில் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லியில் பலத்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வந்தது. இதனால் மிதமான வானிலை நிலவி வந்த தலைநகரில் நேற்று காலையில் மீண்டும் கனமழை பெய்தது. வானில் திடீரென கருமேகம் திரண்டு பலத்த மழை கொட்டியதால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் பெருவெள்ளம் சூழ்ந்தது.
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சாலைகளில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் காத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி ராணுவ தளபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிற்றனர். கனமழையுடன், கடுமையான இருளும் சூழ்ந்து இருந்ததால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்களின் இயக்கம் தடைபட்டது. மேலும் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மின்சாரமும் நிறுத்தப்பட்டது. இதனால் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி நேற்று டெல்லியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு டெல்லியின் முக்கிய பகுதிகளை பார்வையிடுவதாக இருந்தார். அவரது காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால் சில நிகழ்ச்சிகளுக்கு அவர் தாமதமாக சென்றார். டெல்லியை சுற்றிப்பார்க்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

Next Story